Wednesday, February 20, 2008

கைதிகள் or நகரப் பயணம்


குடிசை வீடு....
குப்பி விளக்கில் படிப்பு...
இடையிடையே வட்டமிட்டு செல்லும் விமானங்கள்...
ஆனாலும் வாழ்க்கை இனித்தது...!

நகரத்துக்கு வந்துவிட்டால் சந்தோசமாம்
நகரத்துக்கும் வந்தாயிற்று....
மாடிக் கட்டிடங்கள்...
பளிச்சிடும் மின்விளக்குகள்...

அத்துடன் புதிதாய்..?

சட்டைப்பையில் அனுமதிப்பத்திரம்...!
திறந்த வெளிக் கைதிகள் நாம்.

பின் குறிப்பு : நான் 1999 இல் வவுனிக்குளத்திலிருந்து (உங்களுக்கு தெரியாமல் இருப்பது நல்லதென்றே எண்ணுகிறேன்) வவுனியாவுக்கு வந்தபோது எழுதிய மிகச்சிறிய கவிதை இது.

இந்த கவிதையை புரிந்து கொள்ள நீங்கள் 2001 க்கு முற்பட்ட காலங்களில் வவுனியா மாநகரத்தில் வசித்திருக்க வேண்டும்...

8 comments:

Nimal said...

//சட்டைப்பையில் அனுமதிப்பத்திரம்...!//

நான் 1996ல் வவுனியா மாநகரத்தில் வசித்திருந்தாலும்... இந்த 'அனுபவம்'(?) வெகுவாக கிடைத்தது கொழும்புக்கு வந்த பின்னர்தான்...!!!

தொடர்ந்து எழுத்தவும்...!
வாழ்த்துக்களுடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

செல்பேசியையும் கணினியையும் கூட அடிப்படைத் தேவைகளுக்குள் அறிவித்துவிட்டார்கள்.
அனுமதிப் பத்திரமும் ஒரு அடிப்படைத் தேவைதான் (தமிழர்களுக்கு மட்டும்) அறிவிக்காவிட்டாலும் கூட.

"தமிழனின் பத்திரம்
அனுமதிப் பத்திரம்"

"மகனே பத்திரமாக போய் வா...
என்று அன்று சொன்ன அம்மா,
அனுமதிப் பத்திரத்துடன் போய் வா...
என்கிறாள் இன்று."

கண்ணன் உங்கள் கவிதையை வாசித்து மகிழ்ந்து எனக்கு உதித்த கவிதைகள்தான் மேலுள்ளவை.

நல்ல முயற்சி..தொடர்ந்து எழுதுங்கள்

Mahalingam Nireshkumar said...

நன்றி நிமல்...
நீங்கள் சொல்வது சரிதான். நான் கூட கொழுப்பில் அந்த அனுபவங்களை பெற்றிருக்கிறேன்...
ஆனால் வவுனியாவில் பலகாலமாக...

சுரேஸ்

Purathani said...

தலைப்பு "கைதிகள் or நரகப்பயணம்" என்றிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்...
"முதல்துளி" மழை வெள்ளமாக வாழ்த்துக்கள்.

Unknown said...

நன்றி மது!
உங்கள் பாராட்டுக்கள் என்னை வளர்க்கும் என்பது உறுதி....

அத்துடன் உங்கள் கவிதைகள் மிகச் சிறப்பாக உள்ளன.வாழ்த்துகள்

"மகனே பத்திரமாக போய் வா...
என்று அன்று சொன்ன அம்மா,
அனுமதிப் பத்திரத்துடன் போய் வா...
என்கிறாள் இன்று."

சுட்டெரிக்கும் நிஜங்கள்..

நன்றி

Unknown said...

'தலைப்பு "கைதிகள் or நரகப்பயணம்" என்றிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்...'

ம்ம்ம்ம், நிஜம்தான்....

நன்றி புராதனி....

சுபானு said...

//அத்துடன் புதிதாய்..?

சட்டைப்பையில் அனுமதிப்பத்திரம்...!
திறந்த வெளிக் கைதிகள் நாம்.



உண்மைதான் திறந்த வெளிக் கைதிகள் தான் நாம்... :(

தொடர்ந்து எழுத்தவும்...!
வாழ்த்துக்கள்.

Mahalingam Nireshkumar said...

நண்பர்களே மீண்டும் வலையில் நாம்! முதல் துளியுடன்! முதல் துளி இனி பல படைப்புக்களைத் தாங்கி வரும். அவற்றை மக்கள் அறியச் செய்ய உங்கள் உதவி வேண்டும். செய்வீர்களா?