Friday, February 15, 2008

என்னைப் பற்றி


காலை எழுந்தது முதல் இரவில் படுக்கைக்கு செல்லும் வரை கழுத்தை நெருக்கும் வேலைப் பளுக்களுக்கும் பொறுப்புக்களும் இடையே தமிழை மறந்து விடாது ஏதாவது கிறுக்கி விட வேண்டுமென துடிக்கின்ற ஒருவன்.....


நான் கிறுக்கத் தொடங்கி காலங்கள் கடந்து விட்டன. என் கிறுக்கல்களில் பல பாராட்டையும் பெற்றுவிட்டன. பல பத்திரிகைகளிலும் வந்துவிட்டன. ஆனாலும் நான் சிந்திக்கிறேன்...... இது போதுமா??? என் படைப்புகள் அனைவரையும் சென்றடைகின்றனவா? எனக்கு வெளிப்படையாகவே தெரிகிறது. நிச்சயமாக இல்லை. எனவேதான் நானும் இந்த வழியில் நுழைவதென முடிவெடுத்தேன்.இதோ நுழைந்தும் விட்டேன்.....


நான் இங்கு புதியவன்.ஆனாலும் எனக்கு தெரியும்.தமிழுலகம் எப்போதுமே படைப்பாளிகளை கைவிடுவதில்லை. நான் என்றுமே உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன். உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லயோ உங்கள் கருத்தை தெரியப்படுத்துங்கள். நிறைகளை விட குறைகளை விரும்புபவன் நான்.என்னைச் செதுக்க அவற்றால் தான் முடியும்......


இன்று முதல் வலைப்பூக்களில் தங்கள் படைப்புக்களை தூவும் ஆயிரக்கணக்கான கலைஞர்களில் நானும் ஒருவன்.....


நன்றிகள்

3 comments:

Nimal said...

வணக்கம்...
வருக வருக...

உங்கள் பதிவுகளை வலைப்பதிவு திரட்டிகளில் இணைப்பதன் மூலம் இன்னும் பரந்த வாசகர் வட்டத்தை அடையலாம் என எண்ணுகிறேன்...

http://www.thamizmanam.com/
http://www.thenkoodu.com/
http://www.pageflakes.com/mayunathan

வாழ்த்துக்களுடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

Nimal said...

இவை தவிரவும் இவற்றிலும் இணைக்கலாம்...
http://tamilblogs.com/
http://www.tamilveli.com/
http://www.techtamil.in/


விரைவில் மறுமொழி மட்டறுத்தல் செய்யவும்... இது தேவையற்ற இன்னல்களை தவிர்க்கும்...!

இப்படிக்கு,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

Mahalingam Nireshkumar said...

நன்றி நிமல்...
உங்கள் ஆலோசனைக்கு நன்றி. நான் அதனை உடனடியாகவே செய்கிறேன்...


SURESH